சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சுண்டக்காய் குழம்பு எப்படி தயாரிப்பது?

Report Print Kavitha in உணவு

சர்க்கரை நோய் தான் உடல் நலப்பிரச்சனைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது.

இதனை எளிதில் குறைக்க சில உணவுகள் பெரிதும் துணை புரிகின்றது. அதில் சுண்டக்காய் முக்கிய இடம் பெறுகின்றது.

சுண்டக்காய் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து சர்க்கரை நோயாளிகளுக்கு குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

எனவே சுண்டக்காயில் சுவையான குழம்பு எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
 • சுண்டக்காய் - ஒரு பவுல்
 • கத்தரிக்காய் - 4
 • பூண்டு - 5 பல்
 • எண்ணெய் - 2 ஸ்பூன்
 • கடுகு - 1/2 Tsp
 • சீரகம் - 1/2 Tsp
 • வெந்தையம் - 1/4 Tsp
 • வெங்காயம் - 2
 • தக்களி - 1
 • புளி - சிறிதளவு
 • கருவேப்பிலை - சிறிதளவு
 • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
 • மஞ்சள் - 1/4 Tsp
 • உப்பு - தேவையான அளவு
செய்முறை

கடாயில் எண்னெய் விட்டு கடுகு போட்டு பொறிக்கவும். பின் சீரகம் , வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்ததாக வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்களி சேர்த்து குழைய குழைய வதக்கவும்.

தக்காளி வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது கழுவி இடித்து வைத்துள்ள சுண்டக்காயை போட்டு வதக்கவும். அதோடு நறுக்கிய கத்தரிக்காயையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக மிளகாய் பொடி, மஞ்சள் சேக்கவும். ஊற வைத்துள்ள புளியை கரைத்து ஊற்றவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்துக் கிளறி நன்குக் கொதிக்க விடவும்.

குழம்பு போதுமான அளவு வற்றியதும் இறக்கி விடவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...