உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம் செய்வது எப்படி தெரியுமா?

Report Print Kavitha in உணவு

குடம் புளியில் மற்ற வகைப் புளிகளை விடவும் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றது என சொல்லப்படுகின்றது.

குடம்புளி 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமையலில் சேர்க்கப்பட்டு வருகிறது.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் குடம் புளியை உடல் எடை குறைப்பதற்கு மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.

அந்தவகையில் குடம்புளியை வைத்து உடல் எடையை எப்படி கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம் எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • குடம்புளி - நான்கு துண்டுகள்.
  • இடித்த பூண்டு - அரை தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • தண்ணீர் - ஒரு கப்,
  • தேங்காய் பால் - அரை கப்
  • புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • ஐஸ் துண்டுகள் - தேவைக்கு

செய்முறை

புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

லேசான சுடுநீரில் புளியை மூன்று மணிநேரம் ஊறவைத்துவிட்டு, பின்பு அதனை அப்படியே நீரோடு மிக்சியில் கொட்டி அத்தோடு பூண்டு, மிளகாய் சேர்த்து ஜூஸ் ஆக்குங்கள்.

அதை வடிகட்டி எடுத்து தேங்காய் பாலுடன் கலந்திடுங்கள்.

லேசாக உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதில் ஐஸ்துண்டுகள், புதினா, கொத்தமல்லித்தழை கலந்து பருகுங்கள்.

இந்த பானத்தில் ஹைட்ரோ குளோரிக்கும், ஆன்டிஆக்சிடென்ட்டும் நிறைய இருப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பு நீங்கும்.

அசிடிட்டி அகலும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிகம் பசி எடுக்காது. உடல் எடைகுறையும்.

Google

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்