உடலுக்கு நன்மை பயக்கும் கொத்தமல்லி டீ!

Report Print Abisha in உணவு

நெஞ்செரிச்சல், வயிற்றுகோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல் போன்ற பல நோய்க்களுக்கு அருமருந்து கொத்தமல்லி டீ.

அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி விதை -10 கிராம்,

சீரகம்-2 கிராம்,

சுக்கு (தோல்சீவியது) - 2 கிராம்,

பனங்கற்கண்டு - தேவையான அளவு,

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை,

ஏலம் - 1 சிட்டிகை

செய்முறை

கொத்தமல்லி, சீரகம், சுக்கு ஆகிய மூன்றையும் மேற்குறிப்பிட்ட அளவு எடுத்து (பாலின் அளவை பொறுத்து அதிகரிக்கலாம்) ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக்கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள், ஏலம் சேர்த்து தினமும் இருவேளை குடித்து வருவது நல்லது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்