கிறிஸ்மஸ் கேக் எளிய முறையில் செய்வது எப்படி?

Report Print Abisha in உணவு

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு உணவுகள் அடிப்படையாக உள்ளது. அந்தவகையில், இந்த மாதம் கொண்டாட உள்ள கிறிஸ்மஸ் பண்டிகைக்கான கேக் வீட்டிலேயே தாயரிக்கும் முறை குறித்து பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

மைதா மாவு -300 கிராம்

பேக்கிங் பவுடர் -3 டீஸ்பூன்

சோடா உப்பு -1/2 டீஸ்பூன்

வெண்ணெய் -200 கிராம்

பொடித்த சர்க்கரை -250 கிராம்

முந்திரிப்பருப்பு -50 கிராம்

உலர்ந்த திராட்சை -50 கிராம்

செர்ரி -50 கிராம்

முட்டை -3

பிஸ்தா பருப்பு -50 கிராம்

சுல்தானாஸ் -50 கிராம்

பட்டை மசாலா தூள் -1 டீஸ்பூன்

கோக்கோ -1 டீஸ்பூன்

பிராண்டி – 4 டேபிள் ஸ்பூன்

போர்டு வைன் – 4 டேபிள் ஸ்பூன்

வென்னிலா எஸ்சென்ஸ் -சில துளிகள்

குறிப்பு : பிராண்டி மற்றும் போர்ட் வைன் உபயோகப்படுத்த வேண்டாம் என நினைப்பவர்கள் பால் -100 மில்லி உபயோகப்படுத்தலாம்.

செய்முறை:

மைதா மாவு, பேக்கிங் பவுடர், சோடா, உப்பு, பட்டை மசாலா இவைகளை ஒன்றாக கலந்து மூன்று முறை சலிக்கவும்.

பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். முட்டைகளை உடைத்து ஊற்றி நுரைக்க கலக்கவும்.

குழைத்த வெண்ணை கலவையுடன் அடித்த முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்.

மைதா மாவில் ஊற்றி எல்லாம் ஒன்று சேரும்படி ஒரே திசையில் லேசாக அழுத்தம் தராமல் கலக்கவும்.

இவற்றில் கோக்கோ, பிராண்டி – வைன் (அல்லது பால்) மற்றும் எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.

கடைசியாக செர்ரி பழங்கள், உலர்ந்த திராட்சை, சுல்தானாஸ், முந்திரிப் பருப்பு சேர்த்து பேக்கிங் ட்ரெயில் ஊற்றி ஒவனில் 140 டிகிரி செல்சியஸ்-க்கு பேக் செய்யவும்.

வெந்ததும் வெளியில் எடுத்து, சூடு ஆறிய பின்னர் எடுத்து விரும்பியபடி அலங்காரம் செய்யலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்