சிறுநீரக கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.
கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும், சிறுநீர் வெளியேறாமலும் இருப்பதன் மூலம் சிறுநீரகக் கற்கள் ஏற்படலாம். தைராய்டு சுரப்பியின் சுரப்பு அதிகமானாலும் இப்பிரச்னை ஏற்படலாம்.
இந்த பிரச்னையிலிருந்து விடுபட வாழைத்தண்டு சூப் பெரிதும் உதவி புரிகின்றது.
அந்தவகையில் சிறுநீரக கற்களை கரைக்க கூடிய வாழைத்தண்டு சூப்பை எப்படி குடிப்பது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- வாழைத்தண்டு - 1
- இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
- சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
- மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாழைத்தண்டில் நாரை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய வாழைத்தண்டுடன் இஞ்சித் துருவல், உப்பு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்டு நன்றாக வெந்ததும் அதில் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.
சிறிதளவு பால் சேர்த்தும் பரிமாறலாம். சூப்பரான வாழைத்தண்டு சூப் ரெடி.
