ரவை பாயாசம் செய்வது எப்படி?

Report Print Abisha in உணவு
307Shares

பெருபாலானோர் விரும்பாத உணவுகளில் ஒன்று உப்புமா. அந்த உப்புமா செய்ய பயன்படுத்தப்படும் ரவையில் சுவையான பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை

 • ரவை - 200 கிராம்
 • சர்க்கரை - 300 கிராம்
 • பால் - 500 மிலி
 • நெய் - 2 டீஸ்பூன்
 • ஏலக்காய் - 4
 • முந்திரி பருப்பு - 15
 • பாதாம் - 10
 • பிஸ்தா - 10
 • வால்நட்ஸ் - 10
 • உலர் திராட்சை - 10
 • மில்க்மெய்ட் - 50 மிலி

செய்முறை

கடாயில் நெய்யை ஊற்றி சூடான பின் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், உலர் திராட்சைகளை சேர்த்து மிதமான முறையில் வறுத்து கொள்ளவும்.

அதே கடாயில் மீதமுள்ள நெய் ஊற்றி ரவை சேர்த்து நன்கு வறுக்கவும்.

ரவையை நன்கு வறுத்தவுடன், பால் சேர்க்கவும்.

ரவையை பாலில் நன்கு வேக விடவும். மிகவும் கெட்டியாக இருந்தால், கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.

இப்போது சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.

ரவை கட்டிகளாக ஆகாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

ரவை, சர்க்கரை எல்லாம் நன்றாக கலந்து கெட்டியான பின், வறுத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, வால்நட் மற்றும் உலர் திராட்சையை சேர்த்து நன்கு கிளறவும்.

பின் பரிமாறலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்