சர்க்கரை நோயாளிகளுக்கு சத்து நிறைந்த பாசிப்பயிறு கட்லெட் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக பாசிப்பயிறு திகழ்கிறது.

பாசிப்பயறில் இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது.

மேலும் புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன

சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

இதனை கட்லெட்டாக செய்து சாப்பிடலாம். இது சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை விரும்பி உண்ணலாம்.

தற்போது இந்த கட்லெட்டை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • முளைகட்டிய பாசிப்பயிறு - 1/2 கப்
  • பெரிய வெங்காயம் - 1
  • மிளகு பொடி - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முளைகட்டிய பாசிப்பயிறை மிக்சியில் போட்டு கொரகொர வென்று அரைத்து கொள்ளவும்.

அரைத்த பாசிப்பயிறில் வெங்காயம், மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைத்த மாவை உருண்டையாக செய்து வட்டமாக கட்லட் வடிவில் தட்டி வைக்கவும். அதை பச்சையாகவே சாப்பிடலாம்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தட்டி வைத்த கட்லெட்டுகளை போட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்