புரதம் நிறைந்த கருப்பு உளுந்து அடை செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு
130Shares

அனைத்து உயிரணுக்கள் மற்றும் தீ நுண்மங்களின் கட்டமைப்பு, ஒழுங்கமைப்பு மற்றும் செயல்பாட்டுக்குப் புரதம் இன்றியமையாததாகும்.

புரதம் மனிதனுக்குத் தேவையான முக்கிய உணவு. இது உடல் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியமானது ஆகும்.

அந்தவகையில் புரத சத்து நிறைந்த உணவுகளில் கருப்பு உளுந்து அதிகளவு புரதச் சத்துமிக்க தானியம் ஆகும். இது எலும்புகள் வலுவடைய உதவி புரிகின்றது.

தற்போது புரத சத்து நிறைந்த கருப்பு உளுந்தை வைத்து ஆரோக்கியமான அடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • புழுங்கல் அரிசி - 250 கிராம்,
  • கருப்பு உளுந்து - 100 கிராம்,
  • துவரம்பருப்பு - 1 கப்,
  • வெங்காயம் - 3,
  • காய்ந்த மிளகாய் - 5,
  • இஞ்சி - சிறு துண்டு,
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
  • கருப்பு உளுந்து அடை
செய்முறை

வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

புழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, துவரம்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும்.

அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைத்து கொள்ளவும்.

உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.

இந்த மாவில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்