பிரசவித்த தாய்மார்களுக்கு கொடுக்க வேண்டிய பத்தியக் குழம்பு செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

அவதிப்பட்டு சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கு பத்திய குழம்பு செய்து கொடுக்கலாம். இது தொடர்ந்து சாப்பிட வாய்க்கசப்பு, வயிற்றுப் புண் நீங்கும்.

அதுமட்டுமின்றி பிரசவித்த தாய்மார்களுக்கும் இது உடலுக்கு நல்லது.

அந்தவகையில் தற்போது இந்த பத்திய குழம்பினை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
 • பூண்டு - 5 பல்
 • புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
 • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
 • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 • வெல்லம் - அரை டீஸ்பூன்
 • நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு
 • தேங்காய் - 2 சிறிய துண்டுகள்
 • பூண்டு - 5 பல்
 • வெந்தயம் - கால் டீஸ்பூன்
 • சீரகம் - அரை டீஸ்பூன்
 • மிளகு - 2 டீஸ்பூன்
செய்முறை

புளியைக் கால் கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர், தேங்காயை சிறுத் துண்டுகளாக வெட்டி அதனுடன் மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் வெந்தயம் தாளித்து, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

நன்றாகக் கொதித்து வரும்போது, புளிக் கரைசலைச் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை அடுப்பில் வைத்து இடித்த வெல்லம் சேர்த்து கிளறிய பின்னர் இறக்கவும். விரும்பினால், கறிவேப்பிலையை தாளித்து இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்