சர்க்கரை நோயாளிக்கு மிகவும் உகந்தது அகத்திக்கீரை சூப் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

உலகிலே மிகவும் கொடிய நோய்களுள் சக்கரை நோயும் ஒன்றாகும்.

இதற்கு என்னத்தான் மாத்திரை மருந்துகள் இருந்தாலும் இயற்கை முறையில் தீர்ப்பதே சிறந்த முறை என்று கருதப்படுகின்றது.

அந்தவகையில் சக்கரை நோயாளிகளுக்கு அகத்தி கீரை உகந்ததாகும். தற்போது இந்த அகத்தி கீரை சூப்பை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • அகத்திக்கீரை - 1 கப்
  • வெங்காயம் - 1
  • மிளகு தூள் - அரை தேக்கரண்டி
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • உப்பு - சுவைக்கு
செய்முறை

அகத்திக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வெங்காயம், சீரகம், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

5 நிமிடம் நன்றாக கொதித்ததும் அதில் கழுவி வைத்த கீரையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

தண்ணீர் 2 கப்பாக வற்றியதும் வடிகட்டி பருகவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்