இரவு நேரங்களில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

Report Print Jayapradha in உணவு

உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நன்றாக சாப்பிட வேண்டும், சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.

மேலும் சில உணவுகளை காலை வேளைகளில் தான் சாப்பிட வேண்டும், சில உணவுகளை மாலை வேளைகளில் தான் சாப்பிட வேண்டும்.

ஆனால் இரவில் அப்படி இல்லை. இரவு நேர சாப்பாடு முடிந்தவுடன் தூங்கிவிடுவோம். எனவே இரவு நேர உணவுகளில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.

மேலும் இரவு நேரங்களில் நீங்கள் சாப்பிட கூடாத உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸில் அதிக கலோரிகள் இருப்பதால் அதனை இரவி நேரத்தில் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

மாம்பழம்

மாம்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கும். இதனால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும்.

உருளைக்கிழங்கு

இரவு நேரத்தில் உருளைக்கிழங்கு சாப்பிடுவது செரிமானத்தை பாதிப்பதுடன் வயிற்றுக்கோளாறு, வாந்தி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

திராட்சை

சில பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவது சில பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்தத் வகையில் இரவி நேரத்தில் திராட்சை சாப்பிடுவது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இருமடங்காக உயர்த்தும்.

கத்தரிக்காய்

கத்தரிக்காயை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொண்டாலோ அல்லது இரவி நேரங்களில் சாப்பிட்டாலோ அது உங்கள் கலோரிகளின் அளவை அதிகரிப்பதுடன் உடலில் உள்ள சோடியத்தின் அளவையும் அதிகரிக்கும். இதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படலாம்.

பீட்ரூட்

பொதுவகாவே பீட்ரூட் என்பது அதிக சத்துக்கள் நிறைந்த காகம். இரவு நேரத்தில் பீட்ரூட் சாப்பிடுவது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கக்கூடும்.

முந்திரி

முந்திரியை அதிகமாக சாப்பிட்டால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் தலைவலி மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். இதனை இரவு நேரத்தில் சாப்பிடும்போது இதன் பாதிப்புகள் மேலும் அதிகமாக இருக்கும்.

தேங்காய்

நமது உணவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் தேங்காயானது நமது இரத்தில் உள்ள கொழுப்பின் அளவை உடனடியாக உயர்த்தக்கூடியது. குறிப்பாக கொழுப்பு பிரச்சினைகள் உள்ளவர்கள் இரவு நேரங்களில் ததேங்காயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers