கடுமையான உடல்வலியை உடனே போக்க வேண்டுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்!

Report Print Jayapradha in உணவு

உடல் வலியானது ஒருசில கடுமையான எடை கொண்ட பொருட்களை நீண்ட நேரம் தூக்குவதாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை மேற்கொள்வதாலோ ஏற்படும்.

அனைவருக்கும் இயல்பாக ஏற்படும் கடுமையான உடல் வலியை போக்க ஒருசில பொருட்களை சாப்பிடுவதுடன் சில வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

மேலும் அத்தகைய உடல் வலியை முழுமையாக குணப்படுத்த எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்று பார்க்கலாம்.

உடல் வலியை போக்க என்ன சாப்பிட வேண்டும்?
செர்ரி ஜூஸ்

உடல் வலி மற்றும் அதிக மன அழுத்தம் உள்ளவர்கள், செர்ரி ஜூஸை குடித்து வந்தால், சதைகளில் உண்டாகும் கடுமையான வலியை குறைக்கும்.

ப்ளூ பெர்ரி ஜூஸ்

ப்ளூ பெர்ரி ஜூஸை உடற்பயிற்சி செய்வதற்கும் முன் குடித்தால், சதைகள் சேதமாவதை தடுப்பதுடன், மன அழுத்தமும் குறையும்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய்களை மிக்ஸியில் போட்டு ஒன்று இரண்டாக, முழுவதும் பொடியாக்காமல் அரைத்து, உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால் உடல் வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மீன் மற்றும் முட்டை

தொடர்ச்சியாக உடல்வலி இருப்பவர்களுக்கு விட்டமின் D குறைபாடு ஏற்படும். அதனை போக்க மீன், முட்டை போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்

உடல் வலியை தடுத்து, தசைகளின் செயல்பாட்டை சீராக்க மெக்னீசியம் சத்து மிகவும் அவசியம். எனவே வாழைப்பழம், பாதாம், பிரவுன் அரிசி ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

திராட்சை

தினமும் 1 கப் திராட்சையை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முதுகுப் பகுதியின் ரத்தோட்டத்தை அதிகரித்து, முதுகு மற்றும் இடுப்பு வலியைக் குறைக்கிறது.

கிராம்பு

கிராம்பு பல்வலிக்கு சிறந்த நிவாரணியாகும். எனவே பல்வலி இருக்கும் போது, கிராம்பை வாயில் போட்டு கடித்துக் கொண்டால், பல் வலியில் இருந்து உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.

பூண்டு

பூண்டு பல்லை தட்டி ஆலிவ் ஆயிலில் போட்டு சூடேற்றி, அந்த எண்ணெய் கொண்டு மூட்டுகளுக்கு மசாஜ் செய்து வந்தால், மூட்டு வலிகள் குணமாகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers