உடல் எடையை மிக வேகமாக குறைக்க உதவும் 5 பழங்கள்

Report Print Jayapradha in உணவு

பழங்களில் விட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச் சத்துக்கள் இருப்பதால் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் விரைவில் உடல் எடையை குறைக்க உதவும்.

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், டயட் என்கிற பெயரில் உங்கள் உடல்நலன்களை கெடுத்துக்கொள்ளாமல், ஆரோக்கியமான பாதையில், வேகமாக உடல் எடையை குறைப்பதற்கு சிலவகை பழங்கள் உதவுகிறது.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

சொறி, சிரங்கு மற்றும் ரத்தச்சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. கொய்யா தோல் வறட்சியைப் போக்குவதுடன் முதுமைத் தோற்றத்தைக் குறைத்து இளமையாக இருக்க உதவும்.

பப்பாளி

பப்பாளிப்பழத்தை தினமும் 250 கிராம் அளவு உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் செரிமானக் கோளாறு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல மருந்தாகும்.

பப்பாளி உள்ள கரோட்டின் சத்து, புற்றுநோய்க்கு எதிரியாகும். நுரையீரல் புற்று, உணவுக்குழாய் மற்றும் இரைப்பைப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கக்கூடியது.

அன்னாச்சி

இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ள

அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் தேவையான அளவு ஓமம் சேர்த்து நீர் ஊற்றி காய்ச்ச வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்து வடிகட்டி வெறும் வயிற்றில் தொடர்ந்து 10 நாள்கள் குடித்துவந்தால் தொப்பை குறையும்.

மாதுளை

மாதுளம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த மாதுளம்பழத்தின் சாற்றை அருந்தினால் பலன் கிடைக்கும். உடல்சோர்வைப் போக்க மாதுளம்பழத்தின் சாற்றுடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

வாழைப்பழம்

உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.

வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்றவை புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோட்டினை சிறிது சிறிதாக குறைக்க உதவும். எனவே புகைப்பழக்கம் உள்ளவர்கள் இதனை தினமும் உண்பது மிகவும் நல்லது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்