இது தெரிந்தால் இனி வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க!

Report Print Jayapradha in உணவு

வெங்காயத்தின் வெளிப்புறத்தில் உள்ள ப்ரௌன் நிற அடுக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமாக உள்ளது.

வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.

வெங்காயத் தோலை எப்படி உட்கொள்ளலாம்?
  • வெங்காயத்தின் தோலை சூப் வடிவிலோ அல்லது தேநீர் வடிவிலோ எடுக்கலாம். மேலும் இங்கு வெங்காய தோல் கொண்டு எப்படி டீ தயாரிப்பது என்று பார்ப்போம்.
  • முதலில் வெங்காயத்தின் தோலை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் கழித்து, அந்நீரை வடிகட்டி, தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் ஒரு கப் குடிக்க வேண்டும்.

வெங்காயத்தோலின் இதர பண்புகள்
  • வெங்காய டீயை இரவு படுக்கைக்கு போவதற்கு முன்னர் பருகினால் அடங்கியுள்ள நார்சத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கார்டிவாஸ்குலர் என்னும் இருதய நோய் வரமால் தடுக்கிறது.
  • வெங்காயத் தோலில் உள்ள கரையாத நார்ச்சத்து பெருங்குடலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும், pH அளவை சீராக பராமரிக்கும்.
  • வெங்காயத்தின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையை உள்ளடக்கிய க்யூயர்சிடின், புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழித்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
  • வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, குடலியக்கத்தின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
  • மேலும் வெங்காயத் தோல் டைப்-2 நீரிழிவு, இதய நோய்கள், இரையக குடலிய பிரச்சனைகள், உடல் பருமன், குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கும்.
குறிப்பு
  • வெங்காயத் தோலை கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பயன்படுத்தக்கூடாது

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்