பாம்பு இறைச்சி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா?

Report Print Deepthi Deepthi in உணவு

வியட்நாம் நாட்டில் பாம்பு இறைச்சியும், ரத்தமும் ஆண்மையை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஆனால், 50 வயதுக்கு கீழானோர் குடித்தால் ஆண்மை இழக்கலாம் என கூறப்படுகிறது.

தென் கிழக்காசிய நாடான வியட்நாமில் பாம்பு இறைச்சி ஒரு சுவையான உணவு. வடக்கு பகுதி காடுகளில் பிடிக்கப்படும் பாம்புகள் வெட்டப்படுகின்றன. உயிரோடு வைத்து அதன் மீது வெந்நீர் ஊற்றி கொல்கின்றனர்.

பின்னர், அதனை சுத்தம் செய்து வெட்டி, பொரித்து, மஞ்சள் புல் மிளகு சேர்த்து பரிமாறப்படுகிறது.

பாம்பு இறைச்சியை உண்ணும்போது, பாம்பின் ரத்தம் அல்லது பித்தப்பை அல்லது ஈரலோடு ஒயினை குடிக்கலாம். கடைகளில் சமைக்கப்படும் பாம்பு உணவுகள் எதுவுமே வீணாவதில்லை. பாம்பு இறைச்சியும், ரத்தமும் ஆண்மையை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

தலைவலி போக்கும், ஜீரணத்துக்கும், எலும்புக்கும் பாம்பு இறைச்சி நல்லது என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

ஆனால், பாம்புகளை கொல்வது நாட்டின் வனவிலங்கு சூழலை பாதிக்கும் என வனவிலங்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers