இந்த ஒரு அரிய பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் அற்புத நன்மைகள்

Report Print Kabilan in உணவு

முள் சீத்தா பழம் புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்து வித நோய்கள் மற்றும் உடலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

முள் சீத்தா பழத்தில் புரதம், ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், கால்சியம், வைட்டமின் A, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் B ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

முள் சீத்தா பழத்தை விட அதன் இலைகள் அதிக மருத்துவ தன்மை வாய்ந்தவை. இதனால் உடலின் அனைத்து செயல்பாட்டிற்கும் முள் சீத்தா உதவுகிறது.

முள் சீத்தாவினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

இதய நோய்

முள் சீத்தாவில் உள்ள அதிகமான பொட்டாசியம், உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்கும். இந்த முள் சீத்தாவின் இலைகளை டீ போட்டு குடித்தால் இதயம் சார்ந்த கோளாறுகளை தடுக்கலாம்.

இதய பிரச்சனைகளை தடுக்கும் இந்த பழம், மன அழுத்தம் மற்றும் மன விரக்தி ஆகியவற்றையும் தீர்க்கும்.

புற்றுநோய்

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் முள் சீத்தாவிற்கு உண்டு. இதில் உள்ள அசிடோஜெனின் உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை தந்து, புற்றுநோய் செல்களை உடலில் வரவிடாமல் தடுக்கும்.

சர்க்கரை

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முள் சீத்தா சிறந்த தீர்வை தரும். இது சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். இதன்மூலம், உடலில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். முள் சீத்தாவின் டீயை அருந்தினாலும் சர்க்கரை அளவு அதிகரிக்காது.

மலச்சிக்கல்

முள் சீத்தா அஜீரண கோளாறுகளை சரிசெய்யும். இதனால் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் விடுபடலாம். மேலும் தசைப்பிடிப்பு, வீக்கம் ஆகியவற்றையும் முள் சீத்தா குணப்படுத்தும்.

சீரான ரத்த ஓட்டம்

தினமும் முள் சீத்தா டீயை பருகினால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். இந்த டீயில் கிடைக்கும் இரும்புச்சத்து, ரத்த நாளங்களுக்கு அதிக வலுவை தரும்.

முதுகுவலிக்கு தீர்வு

இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்து வந்தால், முதுகு வலியை ஏற்படுத்தும். எனவே தினமும் 3/4 கப் முள் சீத்தா இலை டீ குடித்து வந்தால் முதுகு வலி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

நீண்ட இளமை

முக அழகை மேம்படுத்த முள் சீத்தா பயன்படும். முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, சருமத்தை இருக செய்யும். மேலும் முகத்தில் ஏதேனும் கட்டிகள், பருக்கள் இருந்தால் அவற்றையும் முள் சீத்தா குணப்படுத்தும். இதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் முகத்தை இளமையாக வைக்க உதவுகிறது.

முடி ஆரோக்கியம்

முடி உதிர்தல், இளநரை, முடி உடைதல், பொடுகு, பேன் தொல்லை போன்ற பிரச்சனைகளை நீக்க முள் சீத்தா பயன்படுகிறது.

உடல் வலிமை

முள் சீத்தாவில் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், அசிடோனிஜெனின் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இவை உடலுக்கு வலிமை தரும். மேலும், வைட்டமின் சி வெள்ளை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதன்மூலம், உடலில் நோய்கள் ஏற்படாது. அத்துடன் உறுப்புகளின் அழுத்தத்தையும் குறைக்கும்.

மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை முள் சீத்தா குறைக்கிறது. உடல் அழகாகவும், கச்சிதமாகவும் வைத்துக் கொள்ள முள் சீத்தா பழத்தை சாப்பிடலாம்.

முள் சீத்தா டீ தயாரிக்கும் முறை

காயந்த அல்லது புதிய 6 முள் சீத்தா இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை 4 கப் நீரில் மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். மேலும், தேவைக்கேற்ப 1 தேக்கரண்டி தேனையும் கலந்துகொள்ளலாம். அதன் பின்னர் 15 நிமிடங்கள் கழித்து டீயை இறக்கி விட வேண்டும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்