இந்த சிறிய பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

Report Print Jayapradha in உணவு

சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழம் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், உடலுக்கு சிறந்த பழமாகும்.

கிவி பழத்தில் ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள், வைட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடன்ட், போலிக் மற்றும் ஜிங்க் அமிலம் இருப்பதால் இவை உடல் ஆரோக்கியத்திற்கும், தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த கிவி பழத்தை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம் .

நன்மைகள்

  • ஆஸ்துமா நோயாளிக்கு இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம்.

  • கிவி பழத்தில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன. எனவே இதனை உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைக்க உதவும்.

  • இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இதனை தினமும்ம் சாப்பிடுவதால் உடலில் நோய் தடுப்பாற்றல் சக்தியை அதிகம் தரக்கூடியது.

  • கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால் இது உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படாமல் பாதுகக்கின்றன. மேலும் இது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

  • கிவி பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

  • மாரடைப்பைத் தடுப்பதிலும் கிவி முக்கிய பங்காற்றுகிறது. இதய தமணிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் சக்தி கிவி பழத்துக்கு உண்டு.

  • கிவி பழத்தில் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலேட் என்ற சத்தும், ஒமேகா 3 என்ற கொழுப்பு மிகவும் அதிக அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு அளிப்பத்து மிகவும் நல்லது.

  • கிவி பழத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைவு என்பதால் இதனை நீரிழிவு நோயாளிகள் உண்ணலாம்.

  • இந்த பழத்தில் போலிக் என்னும் அமிலம் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சிறந்தது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்