தீராத இருமலை போக்கும் கற்கண்டு: எப்படி தெரியுமா?

Report Print Kabilan in உணவு

தீராத இருமலால் அவதிப்படுபவர்கள் கற்கண்டை உண்பதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.

கற்கண்டு

ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் அளவை கற்கண்டு அதிகரிக்க உதவும். அத்துடன் இது தொண்டை வலி மற்றும் இருமலில் இருந்து விடுதலை தரும் அருமருந்தாகும்.

தொண்டைக்குள் கட்டியிருக்கும் சளியை இளக்கி, விரைவில் குணமடைய வைக்கும் திறன் கற்கண்டுக்கு உண்டு.

இருமல்

இருமலில் வறட்டு இருமல் மற்றும் சளியுடன் கூடிய இருமல் என இருவகை உள்ளது. இதில் வறட்டு இருமல் என்பது இருமும் போது சளி வெளிவராது.

ஆனால், சளியுடன் கூடிய இருமலின் போது சளி மற்றும் கோழை வெளிப்படும். இவை இரண்டையும் சரிசெய்யும் ஆற்றல் கற்கண்டிற்கு உண்டு.

கற்கண்டை சாப்பிடுவதன் மூலம் கபம், கோழை ஆகியவை சுத்தப்படுத்தப்படும். இது உடலில் இருந்து சளியை வெளிக்கொண்டு வரும்.

கற்கண்டு துண்டுகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு, வாய்க்குள் ஒதுக்கி ஒவ்வொன்றாக விழுங்க வேண்டும். அப்போது கற்கண்டு சிறு சர்க்கரை துண்டுகளாக சிதைந்து தொண்டைக்கு இதமளிக்கும்.

கற்கண்டு, கறுப்பு மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அவற்றை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இரவு உறங்க செல்லும் முன்னர், இந்தப் பொடியை வாய்க்குள் போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் அதன் பின்னர் தண்ணீர் பருக கூடாது.

இந்த கலவையை தேநீரிலும் தினமும் கலந்து இருமுறை பருகலாம்.

உடலில் செல்களில் சேர்ந்துள்ள வேண்டாத நச்சுப்பொருளே இருமல் மற்றும் சளி உருவாக காரணமாகும். எனவே, கற்கண்டை உண்ணும் போது அதிலுள்ள சர்க்கரை, மூளையின் கவனத்தை திருப்புவதால் இருமல் தற்காலிகமாக நிற்கும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers