கழுத்து கீழ அசிங்கமாக சதை இருக்க? இதை டிரை பண்ணுங்க!

Report Print Jayapradha in உணவு

மனித உடலில் பல்வேறு இடங்களில் இயற்கையாகவே கொழுப்பு தேங்கும். இவ்வாறு கழுத்தில் சதை தோன்றுவதற்கான காரணம் கூட அவர்களின் உடலில் கொழுப்பு தேங்கும் இடம் கழுத்து பகுதியாக இருப்பது தான்.

இந்தப் பிரச்சனையை முற்றிலும் தீர்க்க நீங்கள் அவசியமாக எடுத்துக் கொள்ள உணவுகளை பற்றி பார்க்கலாம்.

செய்ய வேண்டியவை

  • ஒரு நாளைக்கு மூன்று முறைஒரு ஸ்பூன் க்ரீன் டீ உடன் தேவையான அளவு தண்ணீர் எடுத்து கலந்து அதனை ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைத்து பின் ஆறியதும் அதில் தேன் கலந்து குடிக்கலாம்.

  • தேங்காய் எண்ணெயில் மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இதனை நீங்கள் சாப்பிடுவதால் உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்திடும். உடலில் தேவையற்ற கொழுப்பினை அகற்ற இது பெரிதும் உதவிடும்.

  • பூசணியில் அதிகப்படியான விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ், பொட்டாசியம் மற்றும் விட்டமின் ஏ இருக்கிறது. இவை கொழுப்பினை வேகமாக கரைக்க உதவுவதுடன் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுத்திடும்.பூசணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பூசணி ஜூஸ் கூட நீங்கள் குடிக்கலாம்.

  • சூடான தண்ணீரில் எலுமிச்சை கலந்து சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம். இது கொழுப்பை கரைக்கவும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவிடும்.

  • ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை குறைந்தது இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்து தினமும் காலையில் இந்த தண்ணீரை குடிக்கலாம். இதில் அதிகப்படியான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. கழுத்தில் இருக்கும் தசைகளை குறைக்க பெரிதும் உதவிடும்.

  • கேரட்டில் விட்டமின் ஏ மற்றும் ஃபைபர் அதிகமாக இருக்கிறது. இவை சாப்பிட்டால் செரிமானம் ஆவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால் நீங்கள் அடிக்கடி டயர்ட் ஆவது குறையும்.

  • காற்றாழை உடல் எடை குறைக்க பெரிதும் உதவிடுகிறது.கற்றாழை ஜூஸ் ஒரு நாளைக்கு இரண்டு வேலை குடிக்கலாம்.

  • ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு கிளாஸ் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரைத் தவிர நீராகரங்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers