தேவதையாய் மின்னிய ஐஸ்வர்யா ராய்! எடையை குறைத்தது எப்படி?

Report Print Fathima Fathima in உணவு

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய்க்கு இன்றளவும் மவுசு குறையவில்லை.

அபிஷேக் பச்சனை மணமுடித்து ஆராத்யாவை பெற்றெடுத்த பின்னர், ஐஸ்வர்யாவின் உடல் எடை அதிகரித்தது.

இதனால் நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வந்தனர், அவர்களுக்கு பதிலடியாக உடல் எடையை குறைத்து தற்போது படங்களிலும், முக்கிய நிகழ்வுகளிலும் அசத்தி வருகிறார்.

இவரது எடை குறைப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது Brown Rice தானாம், நார்ச்சத்துகள் இதில் நிறைந்துள்ளதுடன் பசியை கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது.

அடுத்ததாக தினமும் காலையில் எழுந்தவுடன் மிதமான சுடு தண்ணீரில் எலுமிச்சை மற்றும் தேனை கலந்து பருகுவது வழக்கம்,

  • ஒரு மணிநேரம் கழித்து காலை உணவாக ஓட்ஸ் அல்லது பிரட்டை எடுத்துக் கொள்வாராம்.
  • மதிய உணவிற்கு சப்பாத்தி, பருப்பு மற்றும் வேகவைத்த காய்கறிகள்.
  • இரவுக்கு பொரித்த மீன் மற்றும் Brown Rice.

மாலை அல்லது 11 மணியளவில் நட்ஸ் மற்றும் அந்த சூழலுக்கு ஏற்ற பழவகைகளை உட்கொள்வது வழக்கம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...