பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

Report Print Fathima Fathima in உணவு

பெண்களின் உடல் வளர்ச்சிக்கு இரும்பு, சுண்ணாம்பு, புரதம் மற்றும் போலிக் அமிலங்கள் இன்றியமையாதது.

இந்த சத்துக்கள் குறையும் போது இடுப்பு வலி, ஒழுங்கற்ற மாதவிடாய், எலும்புகளின் பலவீனம் உட்பட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

குறிப்பாக பெண்கள் கருவுறவும், மாதவிடாய் காலங்களின் சோர்வை நீக்கவும் இந்த சத்துக்கள் அவசியமாகிறது.

மேற்கூறிய சத்துக்களை பெறுவதற்கான உணவுகள் குறித்து பார்க்கலாம்.

உளுந்து களி- தேவையான பொருட்கள்
  • வறுத்து பொடி செய்த கருப்பு உளுந்து
  • நெய்
  • வெல்லம்
  • ஏலக்காய் பொடி.
செய்முறை

உளுந்து மாவுடன் சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

பொங்கி வரும் உளுந்த மாவுடன், சிறிது வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.

பின்னர் நெய்விட்டு அதனை கிளறி அல்வா பதத்தில் இறக்கவும்.

முருங்கை கீரை மசியல்- தேவையான பொருட்கள்
  • முருங்கை கீரை
  • நிலக்கடலை
  • பூண்டு, வரமிளகாய்
  • கடுகு, உளுந்தம் பருப்பு
  • நல்லெண்ணெய், உப்பு
செய்முறை

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி உளுந்து கடுகு சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் அதனுடன் முருங்கை கீரை சேர்த்து நீர் விட்டு கொதிக்கவிடவும்.

அதே சமயம் வேர்க்கடலையை வறுத்து பொடி, தோல் நீக்கிய பின் அதனுடன் வரமிளகாய், பூண்டு பற்கள் சேர்த்து அரைக்கவும்.

இந்த கலவையை வதக்கிய கீரையுடன் சேர்த்து கிளறினால் சுவையான கீரை மசியல் தயார்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...