இந்த 5 உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்: பற்கள் தொடர்பான பிரச்சனையே வராது

Report Print Printha in உணவு

பற்கள் ஆரோக்கியமாக இல்லையெனில், பற்கள் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். ஆனால் இது போன்ற பிரச்சனைகளை தடுக்க சில உணவுகளை சாப்பிட்டாலே போதும்.

செலரி

வெங்காயத்தாளை தான் ஆங்கிலத்தில் செலரி என்று கூறுவார்கள். இந்த செலரியை வாயிலிட்டு நன்றாக மென்று விழுங்க வேண்டிய உணவாகும்.

அப்படி மெல்லும் போது சுரக்கும் உமிழ்நீர் பற்குழியை உருவாக்கக் கூடிய ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் எனும் பாக்டீரியாவின் செயல்களை நியூட்ரலாக்கி கட்டுப்படுத்தப்படுகிறது.

இதனால் செலரியை உணவில் எந்த வகையில் சேர்த்துக் கொண்டாலும் அவை பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

க்ரீன் டீ

க்ரீன் டீ பல வகைகளில் உடல் நலனுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. க்ரீன் டீயில் இருக்கும் கேட்டசின்கள் எனும் மூலக்கூறுகள் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை உண்பதால் வாயில் உருவாகும் பாக்டீரியாக்களை அழிப்பதுடன், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் முற்றிலுமாக அழிக்கிறது.

கிவி பழங்கள்

கிவி பழம், ஆரஞ்சு, லெமன் ஆகியவை விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழ வகைகள். இவைகள் பல், ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

எனவே இந்த பழத்தை மூன்று நாட்கள் பிற பழங்களோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

சீஸ்

சீஸில் வாயின் அமிலகாரத் தன்மையை சமநிலைப் படுத்தும் தன்மை உண்டு என்பதால் வாய்ப் புண்கள் வராமல் தடுக்கும். எனவே சீஸ் சாப்பிடுவதால் பற்களின் எனாமல் பாதுகாக்க உதவுகிறது.

தண்ணீர்

தண்ணீரை ஒரு நாளைக்கு 3 லிட்டர் குடித்து வந்தால் உடலின் இயக்கம் சீராக இருக்கும். ஒவ்வொரு முறை தண்ணீரை அருந்தும் போது பல் ஈறுகளின் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு, உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது.

ஆனால் ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பின்பும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers