பாகற்காயை எந்த நோய் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும்?

Report Print Printha in உணவு

பாகற்காயில் விட்டமின் A, B, C, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

எனவே இதனை நீரிழிவு நோய், தொடர் இருமல், சளி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பாதிக்கப்பட்ட நோயில் இருந்து எளிதில் விடுபடலாம்.

ஆனால் கசப்புத்தன்மை பாகற்காயில் அதிகம் உள்ளதால் பலரும் அதை வெறுகின்றனர். அந்த கசப்பை முற்றிலும் நீக்க முடியாவிட்டாலும் குறைக்க முடியும்.

இதோ, பாகற்காயின் கசப்பைக் குறைக்க சில வழிகள்..

பாகற்காயின் கசப்பைக் குறைப்பது எப்படி?
  • பாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கி அதில் சிறிது உப்பு, புளித்தண்ணீர் தெளித்து ஊறவைத்து பின் அந்த நீரை வடிக்கட்டி சமைத்தால் கசப்பு குறையும்.
  • பாகற்காயை மெல்லிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கி, அதை நன்கு பிழிந்து எடுத்த பின் நீரில் கழுவி மசாலா சேர்த்து வறுத்தால் கசப்பு குறைவாக இருக்கும்.
  • மெலிதாக நறுக்கிய பாகற்காயை 30 நிமிடம் புளி தண்ணீரில் ஊறவைத்து சமைத்தால் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை குறைவாக இருக்கும்.
  • பாகற்காயை சமைக்கும் முன், நன்கு கொதிக்கும் தண்ணீரில் சிறிது உப்புடன் சேர்த்து பாகற்காயை 2-3 நிமிடங்கள் வரை வேகவைத்து, அந்த நீரை வடிகட்டி குளிர்ந்த நீரில் கழுவி சமைக்க வேண்டும்.
  • பாகற்காயை மிக மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொட்டைகளை நீக்கி விட்டு அதில் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து சமைக்கலாம்.
  • பாகற்காயை சமைக்கும் போது சிறிது சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொண்டால் புளிப்பு குறைவாகத் தெரியும்.
  • மெலிதாக நறுக்கிய பாகற்காயுடன் உருளைக்கிழங்கு, சீஸ் ஆகியவற்றைச் சேர்த்து சமைத்தால் கசப்பு இருக்காது.
  • வினிகரையும் சர்க்கரையையும் சமஅளவு கலந்து நன்கு கொதிக்க விட்டு, பின் அந்த கலவையை பாகற்காய் சமைக்கும் போது ஊற்றலாம்.
  • புளிக்காத மோரில் சிறிது உப்பு சேர்த்து அதில் பாகற்காயை ஊறவைத்து சிறிதுநேரம் கழித்து சமைத்தால் பாகற்காயின் கசப்புத்தன்மை குறைந்து விடும்.
  • பாகற்காயின் தோலை நன்கு சீவி விட்டு, அதை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் நன்கு ஊறவைத்து கழுவிய பின் சமைக்கலாம்.
குறிப்பு

மேற்கண்ட அனைத்து குறிப்புகளிலுமே பாகற்காயின் கொட்டைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்