காலை உணவு சாப்பிடுவதை தவிர்த்தால் எடையை விரைவில் குறைக்கலாமா?

Report Print Printha in உணவு
486Shares
486Shares
ibctamil.com

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்து விடுவர்கள்.

ஆனால் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு சக்தி செலவிடப்படுகிறது, அந்த சக்தி நாம் சாப்பிடும் ஒவ்வொரு வேளை சாப்பாட்டில் இருந்து கிடைக்கிறது.

அதிலும் காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்த்து விடவே கூடாது, ஏனெனில் காலை உணவை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை எளிதாக தூண்டப்பட்டு உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனை?

காலை உணவை தவிர்க்கும் போது நம் உடலில் பசியை தூண்டும் ஹார்மோன் அதிகமாக தூண்டப்படும், அதனால் அதிகம் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உண்டாகக்கூடும்.

அதன் காரணமாக உடல் எடை தான் அதிகரிக்கும், மேலும் காலை உணவினை தவிர்ப்பதால் உடலில் இருக்கும் ஆற்றல் குறையும்.

காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், அது நம் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரைட்டுகள், புரோட்டின், கொழுப்பு, விட்டமின் போன்ற பல சத்துக்களை இழக்கக் கூடும்.

எடை குறைக்க காலையில் என்ன சாப்பிடலாம்?
  • காலையில் தினமும் 1 அல்லது 2 வேகவைத்த முட்டைகளை மட்டும் சாப்பிடலாம்.
  • தினமும் காலையில் ஆப்பிள் சாப்பிட்டால் இடுப்பில் உள்ள சதைகளை குறையும்.
  • வாழைப்பழம் அல்லது வாழைப்பழத்தை ஓட்ஸ் உடன் சேர்ந்து சாப்பிடலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்