பெண்களுக்கு 47 - 55 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில், மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவது நின்று போகும். அதனை மெனோபாஸ் நிலை என்று கூறுவார்கள்.
இந்த மெனோபாஸ் நிலையின் போது எவ்வித உடல்நலக் கோளாறுகளும் வராமல் மென்மையாக கடக்க சில உணவுகள் உதவுகிறது.
மெனோபாஸ் கால பிரச்சனையை தடுக்க என்ன சாப்பிடலாம்?
- காலையில் நீராகாரம், தேநீர் மற்றும் ஊறவைத்த பாதாம் பருப்பு ஆகியவை சாப்பிட வேண்டும்.
- கம்பு, சோளம், உளுந்து மாவில் சுட்ட தோசை, பிரண்டை சட்னி அல்லது வெங்காயச் சட்னி. அத்திப்பழம், வாழைப்பழம் போன்ற உணவுகளை காலை உணவாக சாப்பிடலாம்.
- மதிய உணவாக மாப்பிள்ளை சம்பா அல்லது கவுனி அரிசி, வரகரிசி சோறு, வாழைத்தண்டு பச்சடி, பீன்ஸ், அவரை, சிவப்பு கொண்டைக்கடலை, முருங்கை, பசலைக்கீரை, சுரைக்காய், சுண்டைக்காய் ஆகியவை சாப்பிடலாம்.
- மாலை நேரத்தில் முருங்கைக்காய் சூப் , ராகி பனைவெல்லம் சேர்ந்த உருண்டை, நவதானியச் சுண்டல் மற்றும் தேநீர் ஆகியவை சாப்பிட வேண்டும்.
- இரவு நேரத்தில் கேழ்வரகு தோசை அல்லது உளுந்து கஞ்சி போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
குறிப்பு
மேல் கூறப்பட்டுள்ள உணவுப் பழக்கத்தை வாரம் 2-3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் மெனோபாஸ் நிலையை அடையும் போது எவ்வித பாதிப்புகளும் வராது.