கொழுப்பைக் குறைக்கும் சிவப்பு அவல்: எப்படி சாப்பிடலாம்?

Report Print Printha in உணவு

நெல்லை ஊறவைத்து இடித்து அதிலிருந்து உமியை நீக்கி கைகுத்தல் முறையில் அவல் தயாரிக்கப்படுகிறது.

இந்த அவலின் நிறம் மற்றும் ஊட்டச்சத்தானது, அரிசியின் நிறம் மற்றும் அதிலுள்ள ஊட்டச்சத்தை பொறுத்து மாறுபடும். அதனால் அவல் பெரும்பாலும் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

அவலை எப்படி சாப்பிடலாம்?

அவலை பச்சையாக அப்படியே சாப்பிடலாம், வேர்க்கடலை, காய்கறிகளுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிடலாம்.

வெந்நீர், பால், ஜூஸ், தயிரில் ஊறவைத்து சாப்பிடலாம். நெய் அல்லது வெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

பாயசம், புட்டு, கஞ்சி, உப்புமா போன்று அவலை சமைத்து சாப்பிடலாம்.

சிவப்பு அவல்

பிசினி போன்ற சிவப்பு அரிசி ரகங்களில் இருந்து சிவப்பு அவல் தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து, விட்டமின் B, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளது.

பலன்கள்
  • நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை கட்டுப்படுத்தும்.
  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
  • குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
  • உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடலை பிட்டாக்குகிறது.
  • ரத்தச்சோகை வராமல் தடுக்கிறது.
  • மூளைச் செல்களைப் புத்துணர்ச்சியாக்க உதவுகிறது.
  • புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களைக் குடலுக்குள் செல்லாமல் தடுக்கிறது.
  • வாய்ப்புண் மற்றும் நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்