காட்டுப்பன்றி இறைச்சியை சாப்பிட்டு கோமா நிலைக்கான குடும்பம்

Report Print Printha in உணவு
3047Shares

நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியக் குடும்பத்தினர் சமீபத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாடி அதை பதப்படுத்தி ஆசையாக சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

அவர்கள் சாப்பிட்ட சில மணி நேரத்திலே ஒவ்வொருவராக மயக்க நிலைக்கு சென்றுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் மயக்க நிலையிலேயே ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்துள்ளார்.

அதன் பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர்கள் கோமா நிலைக்கு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

கோமா நிலைக்கு என்ன காரணம் என்பதை சோதித்த போது அவர்கள் அனைவரும் சாப்பிட்ட காட்டுப்பன்றியின் இறைச்சி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காட்டுபன்றி இறைச்சியால் பாட்டுலிஸம் எனும் அரிய வகை நோயின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் அதனால் தான் கோமா நிலைக்கு சென்றுள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் பாட்டுலிஸத்தால் ஏற்படக்கூடிய விஷத்தன்மையை முறிக்கும் மருந்துகளை அளித்துள்ளனர்.

அந்த மருந்து நன்கு வேலை செய்து அவர்களில் இருவரிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்ததால் அது பாட்டுலிஸம் நோயின் பாதிப்பாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

முன்னேற்றம் என்றால் கண்களை மட்டுமே திறந்து பார்கின்றார்களே தவிர, இயல்பு நிலைக்கு வரவில்லை.

அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மட்டும் காட்டுபன்றியின் இறைச்சியை சாப்பிடாததல் அவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை.

பாட்டுலிஸம் நோயானது பாக்டீரியம் கிளாஸ்டிரிடியம் பாட்டுலினம் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த பாக்டீரியாவினால் பரவக்கூடியது.

இந்தவகை பாக்டீரியா அவர்கள் சாப்பிட்ட காட்டுப்பன்றி இறைச்சியில் இருந்துள்ள காரணத்தினால் தான் அவர்கள் கோமா நிலையை அடைந்துள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்