நரைமுடி! இந்த உணவுகள் தான் காரணம் தெரியுமா?

Report Print Printha in உணவு
816Shares

தலையில் நரைமுடி வந்து விட்டாலே வயதாகி விட்டதோ என்று சிலர் கவலையில் ஆழ்ந்து விடுவார்கள். ஆனால் அதற்கு வயது மட்டும் காரணமல்ல உணவுகளும் ஒரு காரணமாகும்.

நரைமுடியை உண்டாக்கும் சில உணவுகள் இதோ,

சர்க்கரை

சர்க்கரை மற்றும் அதிகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், சோடா, பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் நரைமுடிகள் வருகிறது.

விட்டமின் E

முடியின் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் E-யின் செயல்திறனை அதிகளவு சர்க்கரை மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள குறைத்துவிடும்.

உப்பு

உப்பு நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்றாலும் அதனை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

செயற்கை இனிப்பு

செயற்கை நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டியான அஜினமொட்டோ சேர்க்கப்பட்ட கடை உணவுகள், கேன்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், சூப் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

இல்லையெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை பாதித்து, உடல் பருமன், அஜீரண கோளாறு, நரைமுடி பிரச்சனை போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

விலங்கு கொழுப்புகள்

விலங்கு கொழுப்புகளை அதிகளவு எடுத்துக் கொண்டால் அது நரைமுடியை உண்டாக்கும். அதனால் மீன் மற்றும் இறைச்சியில் இருந்து கிடைக்கும் விலங்கு கொழுப்புகளை அளவுடன் எடுத்துக் கொள்வதே நல்லது.

வெள்ளை மாவு

கோதுமையில் இருந்து நேரடியாக கிடைக்கும் மாவு ஆரோக்கியமானது. ஆனால் கடைகளில் கிடைக்கும் கோதுமை மாவுகள் வெண்மையாக பளிச்சென்று இருக்க பிளிசிங் செய்யப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பு

சர்க்கரையை செயற்கையான பொருட்களில் இருந்து எடுக்காமல், இயற்கையாக முறையில் சர்க்கரை கிடைக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றை சாப்பிடலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்