கொழுப்பை கரைக்கும் பொங்கல்: இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்

Report Print Printha in உணவு

பயறு வகையை சேர்ந்த கொள்ளு ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதை ஊறவைத்து, வறுத்து, ரசம், துவையல், சூப், குழம்பு போன்ற பல வகையில் விதவிதமாக சமைத்து சாப்பிடலாம்.

இந்த கொள்ளு பயறில் இரும்புச்சத்து, கால்சியம், மாலிப்டினம், பலபீனால்கள் ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த கொள்ளுவில் காரப்பொங்கல் எப்படி வைப்பது என்பதை தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்
 • கொள்ளு - 50 கிராம்
 • பச்சரிசி - 100 கிராம்
 • மஞ்சள்தூள் - சிறிதளவு
 • பெருங்காயத்தூள் - தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு
 • நெய் - 2 ஸ்பூன்
 • மிளகு, சீரகம் - 1/2 டீஸ்பூன்
 • இஞ்சி - சிறிதளவு
 • பச்சை மிளகாய் - 2
 • கறிவேப்பிலை - சிறிதளவு
கொள்ளு காரப்பொங்கல் எப்படி செய்ய வேண்டும்?

கொள்ளை 8 மணி நேரம் நீரில் ஊறவைத்து, தோல் நீக்கிய இஞ்சி துருவல், பொடியாக நறுக்கி பச்சை மிளகாய் ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொண்டு அரிசி மற்றும் கொள்ளை தனித்தனியாக நன்கு வேக வைக்க வேண்டும்.

பின் வேகவைத்த கொள்ளு மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து நன்கு மசிக்க வேண்டும்.

அத்ன பின் கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்த கொள்ளுடன் சேர்த்து நன்றாக கலந்தால் சூப்பரான கொள்ளு காரப் பொங்கல் தயார்.

நன்மைகள்
 • கொள்ளு காரப்பொங்கல் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள கொழுப்புகள் விரைவில் கரையும்.
 • கொள்ளுப் பருப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வர, ஜலதோஷம், வயிற்றுப்போக்கு, கண் நோய்கள் மற்றும் வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.
 • கொள்ளு பருப்பின் பாலில் சூப், ரசம், துவையல், குழம்பு போன்ற வடிவில் சமைத்துது அவ்வப்போது சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
 • கொள்ளுப் பருப்பை ஊற வைத்து தினமும் 100 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் 15 நாட்களில் ஊளைச்சதை குறையும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்