எலி கடித்த உணவை சாப்பிடலாமா? என்ன நடக்கும்?

Report Print Printha in உணவு

வீடுகள் மற்றும் கடைகளில் சில நேரங்களில் தேங்காய் போன்ற சில உணவுப் பொருட்களை எலிகள் கொறித்துப் போட்டு விடும்.

சிலர், எலி கொறித்த இடத்தை மட்டும் வெட்டி வீசி விட்டு மற்ற பகுதியை சாப்பிடுவதற்கு பயன்படுத்துவார்கள்.

இவ்வாறு எலி சாப்பிட்ட உணவுப்பொருட்களைச் சாப்பிடலாமா? அதனால் ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா? என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

எலி கடித்த உணவுகளை சாப்பிடலாமா?

எலி சாப்பிட்ட உணவுகளை கட்டாயம் சாப்பிடக் கூடாது. ஒருவேளை எலி கடித்த உணவை சாப்பிட்டால் வாந்தி, பேதி என்று தொடங்கி, எலிக்காய்ச்சல்(Leptospirosis) வரை பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

ஏனெனில் எலியின் சிறுநீரில் லெப்டோஸ்பைரா (Leptospira) எனும் பாக்டீரியா இருக்கிறது. இது எலியின் சிறுநீர் மற்றும் கழிவுகள் மூலமாக அல்லது கடிப்பதன் மூலமாக பரவுகிறது.

எலி கடித்த உணவுகளை சாப்பிட்ட பின் தொடர் காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, கண் எரிச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த எலி காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை எடுக்காமல் விட்டால், அது மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பாதிப்பு, கணையப் பாதிப்பு, பித்தப்பை பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்