கத்திரிக்காயின் நிறம் என்ன? அற்புத பலன்கள் இதோ

Report Print Printha in உணவு

இயற்கையாகவே காய்கறிகள் பல்வேறு நிறங்களை பெற்றுள்ளது. அதிலும் கத்திரிக்காயில் மூன்று வகை நிறங்களில் காணப்படுகிறது.

கத்திரிக்காயின் ஒவ்வொரு நிறத்தினையும் வைத்து அதனுடைய மருத்துவ பலன்கள் நிர்ணயிக்கப்படுகிறது. அவைகள்,

நீலம் நிறமுள்ள கத்திரிக்காய்

நீல நிறமுள்ள கத்தரிக்காய் என்பது பஞ்சபூதத்தில் தீ மற்றும் வாயு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையால் உருவாகும் நிறம்.

இந்த செடி பூத்து காயாகும் போது சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களில் நீல நிறத்தை இழுத்துக் கொள்கிறது.

பூமியில் இருந்து இரும்புச் சத்தை கிரகிக்கிறது. அதன் காரணமாக, இதனுடைய மேல் தோல் இருண்ட நீலமாகவும், காயின் உட்புறம் வெண்மையாகவும் இருக்கிறது.

இந்த நிறமுள்ள கத்தரிக்காய் கல்லீரலின் பலவீனம், ரத்தமின்மை, மந்த தன்மை போன்ற பிரச்சனையை போக்குகிறது.

வெண்ணிற கத்திரிக்காய்

வெண்ணிற கத்தரிக்காய் சூரியனிடம் இருந்து 7 வண்ணங்களையும் கிரகித்துக் கொள்கிறது. ஆனால் இதில் அக்கினியின் சத்து நிறைந்தது.

இந்த வெண்ணிறம் கொண்ட கத்திரிக்காய் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பித்தத்தை அதிகமாக சுரக்கச் செய்து, அஜீரணக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது.

வெளிர் பச்சை நிறமுள்ள கத்திரிக்காய்

வெளிர்பச்சை நிறமுள்ள கத்தரிக்காய் கல்லீரலை நன்கு செயல்பட வைக்க உதவுகிறது.

பஞ்சபூதங்களில் உடலில் எது குறைபாடாக இருக்கிறதோ அதனை ஈடுகட்ட பொருத்தமான நிறக் காய்கறிகளை தேர்வு செய்து சாப்பிட்டால் நல்ல பலனை பெறலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...