யாரெல்லாம் வாரம் 7 முட்டைகள் சாப்பிடலாம்? இவர்கள் மட்டும் வேண்டாமே

Report Print Printha in உணவு

முட்டையின் வெள்ளைக் கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், சல்பர், ஜிங்க் மற்றும் மஞ்சள் கருவில் விட்டமின் D,B12, B6, A, E, K ஏ, பாலேட், லூட்டின், சீசாந்தின் போன்ற ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது.

யாரெல்லாம் வாரம் 7 முட்டை சாப்பிடலாம்?

ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த முட்டையை சாதாரணமானவர்கள் வாரத்திற்கு 3 முட்டைகள் சாப்பிடலாம்.

ஆனால் வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் ஆகியோர்கள் தினமும் ஒரு முட்டையை வேகவைத்து சாப்பிடலாம் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யாரெல்லாம் தினமும் முட்டை சாப்பிடக் கூடாது?

நீரழிவு நோயாளிகள் மட்டும் தினமும் முட்டை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது அவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே மருத்துவரின் ஆசோசனைப்படி, வாரம் ஓரிரு முட்டை மட்டும் சாப்பிடலாம்.

வெள்ளைக் கருவை யாரெல்லாம் சாப்பிடலாம்?

ரத்தத்தில் அல்புமின் குறைவாக இருப்பவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம்.

முக்கியமாக டயாலிசிஸ் செய்து கொள்பவர்கள், கல்லீரல் தொடர்பான நோய் உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு அல்புமின் குறைவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே இவர்கள் முட்டையை அவித்து அதன் வெள்ளைக் கருவை சாப்பிடலாம்.

நன்மைகள்
  • முட்டையில் அதிக புரோட்டீன் உள்ளதால், பசியை குறைத்து உடலில் அதிக கலோரி சேர்வதை தடுத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்று ஆய்வு கூறுகிறது.
  • முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், மூளை வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, நினைவுத்திறனை அதிகரிக்கிறது.
  • முட்டையில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, கண் பார்வை பாதிப்படையாமல் தடுக்கிறது.
  • முட்டையில் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் அதை அளவோடு சாப்பிட்டால், அது கெட்ட கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராமல் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • முட்டை சாப்பிடும் போது வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை சேர்த்து சாப்பிடுவதே நல்லது. அதனால் முட்டையின் முழு சத்துக்களையும் பெறலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...