கல்லீரல் பாதிப்பா? இதெல்லாம் சாப்பிடுங்கள்

Report Print Printha in உணவு
397Shares
397Shares
ibctamil.com

கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் தென்படும்.

கருவளையம், செரிமானப் பிரச்சனை, வெளுத்த சருமம், அடர்ந்த நிற சிறுநீர் வெளியேற்றம், மஞ்சள் நிற கண்கள், வாய் கசப்பு, வயிறு வீக்கம், வாய் துர்நாற்றம் இது போன்ற பல அறிகுறிகள் கல்லீரல் பாதிப்பினால் ஏற்படும்.

கல்லீரல் பாதிப்பை தடுக்கும் உணவுகள்?
  • ஒரு டம்ளர் நீரில் 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 ஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து தினமும் 3 முறைகள் என்று உணவு சாப்பிடுவதற்கு முன் குடிக்க வேண்டும்.
  • நெல்லிக்காயைத் ஒரு நாளுக்கு 5 என்று தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலிமையாகும். வேண்டுமெனில் தயிர், உப்புடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.
  • அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து, வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.
  • தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடித்து வந்தால் நல்ல பலனைக் காணலாம்.
  • ரத்தத்தில் உள்ள சில ஹார்மோன்கள் கல்லீரலை சில நேரத்தில் சேதப்படுத்தும். இதை தவிர்க்க, ஆளி விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வர கல்லீரல் நோய் வராது.
  • 1/2 டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் 1/2 டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினமும் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.
  • தினமும் 3-4 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், அது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுத்து நல்ல நிவாரணம் அளிக்க உதவுகிறது.
  • பூண்டு, திராட்சை, பீட்ரூட் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் அது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்