உலகின் முதல் புரூட் ஜாம்: இவ்வளவு மாதம் கெட்டுபோகாதாம்

Report Print Printha in உணவு

தமிழர்களின் பண்பாட்டில் பல்வேறு உணவுப் பண்டங்கள், பானங்கள் இருந்தாலும் பஞ்சாமிர்தத்திற்கு மட்டும் தான் அமிர்தம் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

ஏனெனில் இதை விடச் சிறந்த சுவையும், மருத்துவ குணமும் கொண்ட பொருள் வேறில்லை என்பது தான் இதற்கு காரணம்.

பழனியில் நவபாசான சிலையை நிறுவிய போகர், ஒரு மிகச்சிறந்த அருமருந்தாக இந்த பஞ்சாமிர்தத்தை நமக்கு அளித்துள்ளார்.

இது மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகிய மூன்று பொருட்களையும் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இத்தகைய பஞ்சாமிர்தம் பூஜை பொடுளாக மட்டுமின்றி, சளி மற்றும் காய்ச்சல் போன்ற வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கவும் பயன்படுகிறது.

எனவே காலை மற்றும் மாலை என்று இருவேளைகள் ஒரு சிட்டிகை அளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும் நம் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் மிக்க இந்த பஞ்சாமிர்தத்தை பங்குனியில் துவங்கி ஆண்டு முழுவதும் வீட்டில் வைத்து உண்பது பல ஊர்களில் இன்றளவும் வழக்கமாக இருந்து வருகிறது.

இவ்வளவு அரிய பண்டமான பஞ்சாமிர்தம் இன்றைய நிலையில் சுத்தமானதாக கிடைப்பதில்லை என்பது தான் சிக்கலாக உள்ளது.

பழனி மலையில் கிடைக்கும் பஞ்சாமிர்தம் கூட மலை வாழையில் செய்யப்படுவதில்லை.

ஏனெனில் தேவைக்கு ஏற்ப பஞ்சாமிர்தம் செய்வதற்கு ஈடாக மலை வாழை கிடைப்பதில்லை. அதனால் வேறு பழங்கள் கொண்டு பஞ்சாமிர்தம் செய்வதால் அது 15 நாட்களில் கெட்டுப் போகுவதுடன், மருத்துவ குணங்களையும் இழந்து விடுகிறது.

ஆனால் மலை வாழையில் தண்ணீர் பதம் இல்லாததால், அதை கொண்டு தயார் செய்த பஞ்சாமிர்தம் மட்டும் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்கும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்