பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!

Report Print Thayalan Thayalan in உணவு

உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய 40 ரூபாவாகவிருந்த ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 70 ரூபா முதல் 100 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் வரியை 100 வீத வரியை விதிக்குமாறு ஜனாதிபதி அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் உள்நாட்டு பெரிய வெங்காயத்திற்கான கேள்வி அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்