இதயநோய் வராமல் தடுக்கும் கீரை

Report Print Printha in உணவு

புளிச்சக் கீரையை காசினி கீரை என்றும் கூறுவார்கள். புளிப்புச் சுவை கொண்ட இந்தக் கீரையை நறுக்கி, துவரம்பருப்பு சேர்த்து, வேகவைத்து குழம்பு அல்லது தொக்காக செய்து சாப்பிடலாம்.

அதுவும் நம் உணவில் அடிக்கடி இந்த புளிச்சக் கீரையை சாப்பிட்டு வந்தால் ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

புளிச்சக் கீரையின் நன்மைகள்
  • புளிச்சக் கீரை இதயநோய் வராமல் பாதுகாப்பதுடன் சிறுநீரகக் கோளாறுகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
  • சொறி, சிரங்கு உள்ளிட்ட சரும நோய்கள் மூலம் பாதிகப்பட்டவர்கள், புளிச்சக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகும்.
  • புளிச்சக்கீரையை உலரவைத்து, அதனுடன் சம அளவு பாசிப்பருப்பு, ஜாதிக்காய், சுக்கு, மிளகு, காய்ந்த மிளகாய், இந்துப்பு ஆகியவை சேர்த்து பொடித்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
  • புளிச்சக் கீரை பொடியை உணவில் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து அதனுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து 48 நாட்கள் சாப்பிட பெண்களுக்கு மலட்டுத்தன்மை வராது.
  • இரும்பு மற்றும் சுண்ணாம்புச்சத்து நிறைந்த புளிச்சக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தம் தூய்மையாகும்.
  • நம் உணவில் தொடர்ந்து புளிச்சக் கீரை சாப்பிட்டு வந்தால், அது மலச்சிக்கல், ரத்த அழுத்தம், ஜீரணக் கோளாறுகள் போன்றவை சரியாகும்.
  • வாதநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், புளிச்சக்கீரையை இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வாதநோய் குணமாகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்