இந்த 5 முட்டைகளை அடிக்கடி சாப்பிடுங்கள்

Report Print Printha in உணவு

முட்டையில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் அதிகளவு புரோட்டின்க உள்ளது. இந்த சத்துக்கள் கோழி முட்டையில் மட்டுமில்லாமல் மீன், காடை, வாத்து ஆகிய முட்டைகளிலும் நிறைந்துள்ளது.

கோழி முட்டை

கோழி முட்டையில் அதிகளவு புரோட்டின்கள் உள்ளது. இது உடல் எடையை குறைப்பதற்கு மிகச்சிறந்த உணவாக பயன்படுகிறது. எனவே தினம் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நாட்டுக்கோழி முட்டை

கோழி முட்டையை விட அதிக சத்துக்கள் நிறைந்தது நாட்டுக்கோழி முட்டை. எனவே இந்த முட்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.

காடை முட்டை

கோழி முட்டையை விட மிகச் சிறிய அளவில் இருக்கும் காடை முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் உள்ளதால், இது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

மீன் முட்டை

மீன் முட்டை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இதில் அதிகப்படியான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த முட்டையை சாப்பிட்டால் மீனில் உள்ள சத்துக்களை பெறலாம்.

வாத்து முட்டை

வாத்து முட்டை கோழி முட்டையில் அடங்கியுள்ள அளவை விட அதிகளவு புரோட்டின் உள்ளது. மேலும் இதில் மைக்ரோபையல் தன்மையும் அதிகம் உள்ளது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்