இந்த உணவுகளை அதிகம் சாப்பிடாதீங்க: இவ்வளவு ஆபத்து உள்ளது

Report Print Printha in உணவு

புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகள் நம் உடலுக்கு மிக அவசியமானது என்றாலும், அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

புரதச்சத்தை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள்?
  • கார்போஹைட்ரேட் உணவை குறைத்து அதிக புரத உணவுகளை எடுத்துக் கொண்டால் அது நல்ல கொழுப்பை எரித்து, கீட்டோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்து வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
  • அதிக புரதம் எடுத்துக் கொள்வதால், அது செரடோனின் உற்பத்தியை குறைக்கும். அதனால் எரிச்சல், கோபம், மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • புரதச்சத்து மிக்க உணவுகள் அதிக நைட்ரோஜனை உற்பத்தி செய்து, சிறுநீரகத்தின் வேலையை இருமடங்கு அதிகமாக்கும்.
  • பீன்ஸ், பட்டாணி, மற்றும் காய்கறிகள் ஆகிய உணவுகளை தினமும் சாப்பிட்டால், அது அதிக அமிலத்தை உருவாக்கி, அசிடிட்டி, வாயு, வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • தினமும் உணவில் புரதம் அதிகம் சேர்க்கக் கூடாது, ஏனெனில் அதிக புரத உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்