கொழுப்பை குறைக்கும் வெந்தயம்: எப்படி சாப்பிட வேண்டும்?

Report Print Printha in உணவு

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க வெந்தயத்தை சாப்பிட நான்கு வழி முறைகள் உள்ளது. அவற்றில் ஏதேனும் ஒன்றை சரியாக பின்பற்றி வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

வெந்தயத்தை எப்படி சாப்பிடலாம்?
  • சூடான வெந்தயத்தை நன்றாக பொடி செய்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
  • முளை கட்டிய வெந்தயத்தை தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடல் எடை கனிசமாகக் குறையும்.
  • ஒரு கை வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் ஊறவைத்த தண்ணீர் மற்றும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும்.
  • வெந்தயத்தை பொடி செய்து அதில் தேநீர் தயாரித்து அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
நன்மைகள்
  • வெந்தயத்தில் உள்ள கேலக்டோமேனன் சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புகளை எரிக்கிறது.
  • வெந்தயம் சாப்பிடுவதால் அது வயிறு நிறைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதனால் அதிக பசி மற்றும் உடல் எடையும் குறையும்.
  • வெந்தயத்தில் உள்ள நார் பொருட்கள் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைத்து, மலசிக்கல் வராமல் தடுக்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்