உடல் எடை குறைக்கும் உணவுகள்: இரவில் மட்டும் சாப்பிடுங்கள்

Report Print Printha in உணவு

உடல் எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.

இதனால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வாழைப்பழம்

இரவில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் நம் உடலுக்கு தேவையான கலோரிகள் வாழைப்பழத்தில் உள்ளது.

ஓட்ஸ் உணவு

கொழுப்புச்சத்து இல்லாத மிகச் சிறந்த ஒரு உணவு ஓட்ஸ். எனவே தினமும் இரவில் ஒரு கப் ஓட்ஸ் உணவை சாப்பிட்டு வந்தால், எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம்.

தானிய உணவுகள்

தானிய வகை உணவுகளை வேகவைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம்.

முட்டை

இரண்டு அல்லது மூன்று வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் இரவில் சாப்பிட்டு வந்தால், நம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும்.

பால்

கொழுப்புகள் நீக்கப்பட்ட பாலை ஒரு டம்ளர் இரவில் தொடர்ந்து குடித்து வந்தால், ஓரு மாதத்திற்குள் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

குறிப்பு

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், நொறுக்கு தீனிகள், முழு சாப்பாடு, மது மற்றும் காபி குடித்தல் போன்றவற்றை இரவில் தவிர்க்க வேண்டும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments