கொழுப்பைக் கரைக்கும் குடைமிளகாய்: எப்படி சாப்பிடலாம்?

Report Print Printha in உணவு

காரம் மற்றும் நறுமணம் கொண்ட குடைமிளகாயில் பொட்டாசியம், விட்டமின்கள் A, B, D, C, D, K, இரும்பு சத்துக்கள் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

இத்தகைய சத்துக்களை கொண்ட குடைமிளகாயை எப்படி சாப்பிட்டால், அதனுடைய மருத்துவ நன்மைகளை பெறலாம் தெரியுமா?

தேவையான பொருட்கள்
 • குடைமிளகாய்
 • பூண்டு
 • சோம்பு
 • உப்பு
 • மிளகுப்பொடி
தயாரிக்கும் முறை

பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டு அதில், 2 பல் பூண்டை தட்டி போட்டு, 2 ஸ்பூன் குடைமிளகாய் துண்டுகள் மற்றும் சோம்பு, உப்பு, மிளகுப்பொடி ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

மருத்துவ நன்மைகள்
 • குடைமிளகாய் பானத்தைக் குடிப்பதால், வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
 • குடைமிளகாய் செரிமானத்தை சீர்செய்து, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க பயன்படுகிறது.
 • இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து, இதயத்தின் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

 • குடைமிளகாயை உணவில் அதிகமாக பயன்படுத்துவதால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

 • குடைமிளகாய், தக்காளி, உப்பு, மிளகுப்பொடி ஆகியவை சேர்த்து நல்லெண்ணெய்யில் வதக்கி, சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

 • குடைமிளகாய் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுவதுடன், உள்ளங்காலில் ஏற்படும் வலி, மரத்துப்போதல் போன்ற பிரச்சனையை குணமாக்க உதவுகிறது.

 • குடைமிளகாய் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் உடலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், சிவப்பு தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments