வெறும் வயிற்றில் இதை குடியுங்கள்: நடக்கும் அற்புதம் இதோ!

Report Print Printha in உணவு

தினமும் ஒரு ஆப்பிளுடன் பட்டை சேர்த்து ஜூஸ் தயாரித்துக் குடித்து வந்தால், ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

ஏனெனில் இந்த ஸ்மூத்தியில் நார்ச்சத்து, நல்ல கொழுப்புக்கள், புரோட்டீன், எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள்
 • பட்டை தூள் - 2 ஸ்பூன்
 • ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை
 • வாழைப்பழம் - 1
 • பால் - 1 கப்
 • தயிர் - 1/2 கப்
 • ஓட்ஸ் - 4 டேபிள் ஸ்பூன்
 • ஆப்பிள் - சில துண்டுகள்
செய்முறை

பட்டை தூள், ஜாதிக்காய் பொடி, வாழைப்பழம், பால், தயிர், ஓட்ஸ் மற்றும் ஆப்பிள் ஆகிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து, சிறிதளவு நீர் சேர்த்துக் கொண்டால் ஆப்பிள் பட்டை ஸ்மூத்தி தயார்!

நன்மைகள்
 • ஆப்பிளில் பெக்டின் நார்ச்சத்து உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 • ஆப்பிளின் தோலில் க்யூயர்சிடின் எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது மூளைச் செல்களை பாதுகாத்து, அல்சைமர் நோய் வராமல் தடுக்கிறது.
 • ஆப்பிள், பட்டை கலந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பசியையும் கட்டுப்படுத்தி, சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது.
 • நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments