இதுல 1 டம்ளர் ஜூஸ் குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்

Report Print Printha in உணவு

அனைத்து வகையான காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை கொண்டது. ஆனால் அதில் நமது உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ஒரு காய்கறி வகை பீட்ரூட்.

எனவே இந்த பீட்ரூட்டை ஜூஸ் செய்து தினமும் 1 டம்ளர் குடித்து வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
  • பீட்ரூட் ஜூஸை குடிப்பதன் மூலம், அதில் உள்ள குளுதாதயோன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பித்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், விட்டமின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளதால், அது ரத்தணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ரத்தசோகை பிரச்சனை வராமல் தடுக்கிறது.
  • அழற்சி மற்றும் கிருமிகளின் தாக்கத்தினால் உடலினுள் ஏற்படும் வீக்கங்கள் வராமல் தடுக்க பீட்ரூட் ஜூஸை ஒரு டம்ளர் தினமும் குடித்து வர வேண்டும்.
  • தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • பீட்ரூட்டில் உள்ள பீட்டாலயின் என்னும் பொருள் நமது உடம்பில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தம் செய்ய உதவுகிறது.
  • பீட்ரூட் ஜூஸை தினமும் 1 டம்ளர் குடித்து வந்தால், அதில் உள்ள நைட்ரேட் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் வராமல் தடுக்கச் செய்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments