மீன் சாப்பிடுவது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்: அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in உணவு

உலகளவில் நிலத்தில் இருக்கும் குப்பைகளை விட கடல், குளம் போன்ற நீர்நிலைகளில் தான் அதிகம் பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்படுகிறது என்பது தெரியுமா?

உலகம் முழுக்க வருடத்திற்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்குள் வந்து சேருகின்றன.

இது கடலில் வாழும் உயிரனங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துகிறது. கடந்த வருடம் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், அங்கு பிடிக்கப்படும் மீன்களில் மூன்றில், ஒரு மீனின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்தால் 2050ல் கடலில் வாழும் உயிரினங்கள் 99 சதவீதம் பிளாஸ்டிக் சாப்பிட்டிருக்கும்.

உலகளவில் பெரும்பாலான மீன்கள் அதிகப்படியான பிளாஸ்டிக்கை உண்கின்றன, அந்தப் பிளாஸ்டிக் அதன் குடலிலேயே தங்கிவிடுகின்றன.

சில மீன்களின் குடலில் பிளாஸ்டிக் செரித்தாலும், அந்தப் பிளாஸ்டிக்கின் ரசாயனங்கள் அதன் உடலில் தங்கும்.

அந்த மீன்களை மனிதர்கள் சாப்பிடும் போது கெமிக்கல் பிளாஸ்டிக் நம் வயிற்றில் போகிறது.

இது உடலுக்கு கேடுகளை விளைவிக்கும், மனிதர்கள் தாங்களே தற்கொலை செய்து கொள்வதற்கு இது சமம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? கடலில் நாம் தூக்கி போடும் பிளாஸ்டிக்குகள் நமக்கே எமனாக வருகிறது. எல்லோரும் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணமிது!

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments