காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிடுங்கள்: நடக்கும் அற்புதம் இதோ

Report Print Printha in உணவு

அத்திப்பழத்தில் கால்சியம், விட்டமின் C, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

அதிலும் உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • உலர்ந்த அத்திப்பழத்தில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே அதை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
  • அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால், மருத்துவரிடம் ஆலோசித்து சாப்பிடலாம்.
  • உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து வளமாக உள்ளதால், இது செரிமான மண்டலத்தை மேம்படுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
  • உலர்ந்த அத்திப்பழத்தில் உள்ள இரும்புச் சத்துக்கள் உடலில் ஹீமோகுளோபின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ரத்த சோகை மற்றும் ரத்த அழுத்தம் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
  • அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நமது உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களின் மூலம் டி.என்.ஏ பாதிப்படைவதை தடுத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
  • அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாக இருப்பதால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து அதிகப்படியான உடல் எடையைக் குறைக்கிறது.
  • அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால், அது பாலுணர்வு மற்றும் கருவுறும் திறனை அதிகரித்து, இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • தினமும் காலையில் தவறாமல் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால், அது இதய நோய் வராமல் தடுத்து, சருமத்தின் அழகை இளமையாக பாதுக்காக்க உதவுகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments