கொழுப்பை குறைக்கும் சிவப்பு நிற காய்கறிகள்! இது செம ஹாட் ஸ்பெஷல்

Report Print Meenakshi in உணவு

அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை நாம் அதிகம் சேர்த்து கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்களை பெறலாம்.

அடர்நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்களில் தான் அதிகளவு சத்துக்கள் அடங்கியுள்ளது.

சிவப்பு நிறம் கொண்ட காய்கறிகள், பழங்களை நமது உணவில் அதிக சேர்த்து கொள்வதால் சர்க்கரை நோய் மற்றும் அதிகளவு கொழுப்புக்கள் சேர்வதை தடுக்கலாம்.

பீட்ரூட்

அதிகளவு சத்துக்களை கொண்ட காய்கறிகளில் மிக முக்கியமானது. இதில் அதிகளவு பொட்டாசியம், விட்டமின் சி, பி, கே, மற்றும் பைபர், போலேட்டுகள் உள்ளது.

பீட்ரூட்டினை உணவில் அதிகளவு சேர்த்து கொள்வதால் இரத்த ஓட்டம் சீராகிறது. இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது.

தக்காளி

தக்காளியில் அதிகளவு லைக்கோபைன் உள்ளது. மேலும் விட்டமின் சி மற்றும் பொட்டாசிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

தக்காளியை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவதால் இதில் உள்ள சத்துக்கள் அதிகளவில் சிதையாமல் கிடைக்கிறது.

சிவப்பு மிளகாய்

இதில் ஒரு நாளுக்கு தேவையான விட்டமின் சி, மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது. அதிகப்படியான காரம் இருந்தாலும் காப்சின் புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மையுடையது. வலியினை குறைக்கும்.

இது போன்ற மற்ற சிவப்பு நிற காய்கறிகளான சிவப்பு குடைமிளகாய், சிவப்பு முள்ளங்கி, வெங்காயம், முட்டைகோஸ் ஆகியவற்றினையும் அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள ஆன்டி- ஆக்ஸைடுகளானது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. உடல் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பினை கரைக்க உதவுகிறது.

இதனால் இரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்பட்டு இதய உண்டாவது குறைகிறது.

பெர்ரி

பெர்ரி உடலில் தங்கும் கெட்ட கொழுப்பினை கரைக்க உதவுகிறது. இதனால் இதய நோய் ஏற்படுவது குறைகிறது. உடலில் ஏற்படும் பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

தர்பூசணி, சிவப்பு திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றினை அதிகளவில் சேர்த்து கொள்ளவேண்டும்.

பலன்கள்

சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள், காய்கறிகளை உண்பதால் புரோஸ்டேட், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது குறைகிறது.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியினை தடுக்கிறது.

இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது, கொழுப்பினை வெளியேற்ற உதவுகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments