வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பக்கவிளைவுகளா?

Report Print Printha in உணவு

அனைவரும் விரும்பி சாப்பிடும் வாழைப்பழத்தில் நன்மைகள் மட்டுமின்றி சில தீமைகளையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
  • வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், கலோரிகள் அதிகளவில் நிறைந்திருப்பதால், இதை அதிகமாக சாப்பிடும் போது, உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.
  • வாழைப்பழத்தில் உள்ள தைரமைன் மற்றும் பீனைஎத்திலமைன் என்னும் அமினோ ஆசிட்டுகள், மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கடுமையான தலைவலியை ஏற்படுத்துகிறது.
  • இரவில் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது நமது உடலில் தூக்கத்தை கெடுக்கும் செரடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து, தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
  • வாழைப்பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால், அது ரத்த அழுத்தத்தில் இடையூறை ஏற்படுத்தி, குறைந்த ரத்த அழுத்தப் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
  • வாழைப்பழத்தில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் சத்துக்கள் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், சிறுநீரகத்திலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் B6 சத்துக்கள் அளவுக்கு அதிகமாக நமது உடலில் சேரும் போதும், நரம்பு மண்டலத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • வாழைப்பழம் ஒரு இனிப்பு நிறைந்த பழம் என்பதால், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது பற்களை சொத்தையாக்கி பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments