ஆண்களே இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்.. ஆபத்து!

Report Print Printha in உணவு

ஆண்கள் தினமும் தங்களின் அன்றாட உணவில் இந்த வெள்ளை உணவுகள் சாப்பிடுவதை மட்டும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கலாம்.

பிரெட்

ஆண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வெள்ளை உணவுகளில் முதன்மையானது இந்த பிரெட். ஏனெனில் மைதா கொண்டு தயாரிக்கப்படும் இந்த வெள்ளை உணவு உடலில் கார்ப்ஸ் அளவை அதிகரிக்க காரணியாக இருக்கிறது.

மேலும் தானியம் அல்லது கோதுமை பிரெட் சாப்பிடுபவராக இருப்பினும் இதை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

பால் உணவுகள்

பால் உணவுகளை ஆண்கள் அதிகளவில் உட்கொள்ள கூடாது. ஏனெனில் அதிகமான பால் உணவுகள் செரிமான கோளாறுகள் மற்றும் உடல் பருமன் அதிகரிப்பு போன்ற பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

பாஸ்தா

சுத்திகரிக்கப்பட்ட மாவு கொண்டு தயாரிக்கப்படும் பாஸ்தா உடலில் கொழுப்பு செல்களை அதிகரித்து, உடல் பருமன், ரத்த ஓட்டத்தில் குறைபாடு, டெஸ்டோஸ்டிரோன் சுரப்பதில் குறைப்பாடு, ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

வெள்ளை அரிசி உணவுகள்

வெள்ளை அரிசியினால் தயாரிக்கப்படும் இட்லி, தோசை, சாப்பாடு போன்ற உணவுகளை நாள் முழுக்க அதிகமாக சாப்பிடக் கூடாது.

ஏனெனில் இதனால் உடல் எடை பிரச்சனையை அதிகரித்து விடும். எனவே அரிசி உணவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஜூஸ்

கடைகளில் விற்கப்படும் கேன் ஜூஸ்களில் செயற்கை சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படுகிறது. எனவே கேன் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து நீரிழிவு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments