பாகற்காய் ஜூஸுடன் கேரட் ஜூஸா? இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

Report Print Printha in உணவு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸ், 3 டேபிள் ஸ்பூன் பாகற்காய் ஜூஸ் ஆகிவற்றுடன் சிறிது தேன் கலந்து குடிப்பதால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

இவ்வாறு தொடர்ந்து 2 மாதத்திற்கு குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ!

பாகற்காய் மற்றும் கேரட் ஜூஸை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • கேரட் ஜூஸ் மற்றும் பாகற்காய் ஜூஸ் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் குடிப்பதால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடல் எடையைக் குறைப்பதற்கும், உடலின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
  • பாகற்காய் கலந்த இந்த இயற்கை ஜூஸில் உள்ள என்சைம்கள் நம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, நச்சுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்கிறது.
  • கேரட் மற்றும் பாகற்காய் கலந்த ஜூஸில் அதிக அளவில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே இது சரும அலர்ஜி தடுப்புகள் மற்றும் படை போன்ற சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • கேரட் கலந்த இந்த ஜூஸில் விட்டமின் A உள்ளது. எனவே இது கண் பார்வை நரம்புகளுக்கு வலிமை சேர்த்து கண் பார்வை மேம்படுத்த உதவுகிறது.
  • கேரட் ஜூஸ் மற்றும் பாகற்காய் ஜூஸ் கலந்தக் கலவையில் பீட்டா கரோட்டின் உள்ளது. எனவே இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.
  • உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இந்த ஜூஸில் அதிகமாக உள்ளது. எனவே இது நமது ரத்த தமனிகளை விரிவடையச் செய்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே இது ரத்த சிவப்பு செல்கள் நோய் கிருமிகளோடு எதிர்த்துப் போராட உதவுகிறது.
  • பாகற்காய் ஜூஸ் மற்றும் கேரட் ஜூஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை நீக்கி, நீரிழிவு நோயின் பாதிப்புகள் வராமல் தடுக்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments