காலை, மதியம், இரவு இதை சாப்பிடுங்கள்: நடக்கும் அதிசயம் ஏராளம்

Report Print Printha in உணவு

சித்த மருத்துவத்தில் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய் ஆகிய மூன்று பொருட்களுமே மிகவும் முக்கியமான ஒன்று.

எனவே இந்த மூன்று உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆயுள் அதிகரிப்பதுடன், ஆரோக்கியமாகவும் வாழலாம்.

இஞ்சி

காலையில் வெறும் வயிற்றில் மூன்று டீஸ்பூன் இஞ்சி சாறுடன் சுத்தமான தேனை சமஅளவு கலந்து குடித்து வந்தால், அது உடம்பில் உள்ள பித்தத்தை குறைக்கும்.

ஆனால் இஞ்சியின் தோலில் தோலை உரித்த பின் இஞ்சியை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

சுக்கு

சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பை தடவி, காயவைத்து, மிதமான நெருப்பில் வாட்டி, அந்த சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் போது எடுத்து அதை நன்றாக ஆறியதும் ஒரு கத்தியால் சுக்கின் மேல் தோலை எளிதில் எடுத்து விடலாம்.

பின் இவ்வாறு தோல் நீக்கிய சுக்குத் தூளை மதியம் உணவிற்கு முன் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிட்டால், வாயு பிரச்சனையை தடுக்கலாம்.

கடுக்காய்

கடுக்காயில் இருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு அதன் மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து அதை இடித்து தூள் செய்து கொள்ள வேண்டும்.

பின் இரவில் உறங்கும் போது கடுக்காய் தூளில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், கபம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாகும்.

குறிப்பு

இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய் ஆகிய மூன்று பொருட்களுமே நமது உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

ஆனால் அதை சாப்பிடும் போது எந்த நேரத்தில் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை நன்கு தெரிந்து, எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments